Saturday 4 February 2012

ஜாதிகளும் , மதங்களும் எதற்காக - எனது பார்வை


உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு எது என்றால் கேட்டால் எல்லாரும் கூறும் ஒரே வார்த்தை " இந்தியா " என்பது தான் .  மாத்திரமல்ல ஆயிரக்கணக்கான ஜாதிகளும் , பல்வேறு மதப்பிரிவினரும் வாழ்ந்தாலும் " வேற்றுமையில் ஒற்றுமை " என்ற கோஷம் தான் இந்தியாவை வானுயரம் உயர்த்துகிறது என்றால் அது மிகையாகாது .   ஆனாலும் இந்த ஜாதிகளும் , மதங்களும் ஏன் தான் இந்தியாவில் உள்ளனவோ என்று நினைக்க தோன்றுகிற கால கட்டத்தில் நாம் இருக்கிறோம் . 


ஜாதிகள் உருவான கதை :  "  ஜாதிகள் இல்லையடி பாப்பா "  என்ற பாடல் அடிகளை அறியாதோர் யாரும் இருக்க முடியாது .   ஆனால் இன்றைய இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் இந்த ஜாதி பிரிவினைகள் என்றால் அது உண்மை தான் .   அவரவர் செய்த தொழில் வைத்து தான் ஜாதிகள் பிரிக்கப்பட்டதே ஒழிய , பிறப்பாலும் இறப்பாலும் யாரும் யாருக்கும் உயர்ந்தவரும் இல்லை , தாழ்ந்தவரும் இல்லை என்பது தான் உண்மை.

  

ஆனால் நிலைமை தலை கீழாக மாறிவிட்டது இப்பொழுது .   ஜாதிகளுக்காக கட்சிகள் உருவாக தொடங்கியிருப்பது ஒரு மாபெரும் அபாயத்தின் அறிகுறி என்பதை தவீர நான் சொல்லுவதற்கு வேறொன்றும் இல்லை .   ஜாதி தலைவர்கள் தங்கள் ஆதாயத்திற்காக அப்பாவி ஜனங்களை உபயோகித்து கொள்ளுகிறார்கள் .  நான் சொல்லுவது உங்களுக்கு புரியவில்லை என்றால் ... கொஞ்சம் யோசித்து பாருங்கள் ...!  ஜாதி கலவரங்கள் வந்தால் பலியாவது தலைவர்கள் இல்லை .  அப்பாவிகள் மாத்திரமே .....  சாகும் உயிர்களுக்கு  மாலையும்  , கொஞ்சம் போஸ்டர்களும் தான் மிஞ்சும் ... வேறென்ன கிடைக்கும் ..... எதற்கு எடுத்தாலும் ஜாதி பெயரை உபயோகிக்கும் தலைவர்கள் புறக்கணிக்கப் படவேண்டும் .

மத்திய அரசு கீழ் ஜாதி மக்களுக்கு ஏதும் செய்யவில்லை என்ற மாயாவதி அவர்களின் குற்றசாட்டு ஒரு உதாரணம் 


சமயங்கள் எதற்க்காக :   சமயம் என்ற சொல் " பக்குவப்படுத்தல் " என்ற பொருள் படுவதாக நான் பள்ளியில் படைத்த பாடத்தை நினைவு கூறுகிறேன் .  ஆனால் இன்றைக்கு நடக்கும் சில காரியங்கள் மக்கள் மத்தியில் பெரும் பிளவை ஏற்ப்படுத்தும் அபாயம் உடையவையாக இருக்கிறது .  உதாரனத்திற்க்கு  :  கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த போராட்டங்கள் .   திரு .  உதயகுமார் அவர்கள் பேசும் பொழுது  , " சிறுபான்மை சமுதாயத்திற்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை " என்று பேசினார் .  இவர் அணுமின் நிலையத்தை குறித்த அச்சத்தில் பேசுகிறாரா அல்லது கலவரத்தை உண்டாக்க பேசுகிறாரா என்பதை அரசு உணரவில்லை என்றாலும் மக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்


ஜாதி பெயர்களையும் ,  சமயங்களின் பெயர்களையும் பயன்படுத்தி கலகம் உண்டாக்கும் யாராய் இருந்தாலும் அவர்களின் முகமூடி கிழிக்கப்பட வேண்டும் என்பதும் ஜனநாயக இந்தியாவின் கண்ணியம் தொடர்ந்து பாதுகாக்கப் படவேண்டும் என்பதுமே இந்த இந்தியனின் ஆசை ...

2 comments:

  1. வணக்கம் தோழர்,

    ஜாதி சிக்கலுக்கு ஜாதிய கட்சிகளே காரணம் என்று தாங்கள் இங்கு எழுதியுள்ளீர்கள்.

    எனக்கு ஒரே சந்தேகம், இந்த கட்சிகள் வந்த பிறகு ஜாதிகள் வந்ததா? ஜாதிகள் வந்த பிறகு கட்சிகள் வந்ததா?

    எதன் பேரால் நம் உரிமைகள் மறுக்கப்பட்டனவோ அதன் பேராலேயே நம் உரிமைகளை மீட்டெடுப்பதுதானே சமூக நீதி

    ஜாதிகளின் தோற்றுவாயை பற்றி குறிப்பிடாமல், அது கட்சிகளால் மட்டும் வளர்க்கப்படுகிறது என்ற பார்வை சரியா?, திருமணத்தில் ஜாதி இல்லையா, பிறப்பிலும், சாவிலும் ஜாதியை வைத்துக் கொண்டிருக்கும் சமூகத்தை விட்டு விட்டு கட்சிகளோடு மட்டுமே கட்டூரையை முடித்து விட்டீர்களே!!!!!

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு வணக்கம் ,

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ....

      //எனக்கு ஒரே சந்தேகம், இந்த கட்சிகள் வந்த பிறகு ஜாதிகள் வந்ததா? ஜாதிகள் வந்த பிறகு கட்சிகள் வந்ததா?//
      ஜாதிகள் தான் முதலில் வந்தது என்பதில் நமக்குள் எந்த மாற்று கருத்தும் இல்லை நண்பரே ..

      //எதன் பேரால் நம் உரிமைகள் மறுக்கப்பட்டனவோ அதன் பேராலேயே நம் உரிமைகளை மீட்டெடுப்பதுதானே சமூக நீதி//
      நீங்கள் சொன்ன இந்த காரணத்திற்க்காக சில நல்லவர்களால் சில சங்கங்கள் தோற்றுவிக்கப்பட்டது உண்மை . நான் இல்லை என்று சொல்லவில்லை . ஆனால் இன்று அந்த நிலையில் இருந்து மாறி , சுய நபர் ஆதாயத்திற்காக ஜாதி பெயரை உபயோகப்படுத்துவதை தான் என்னால் ஏற்று கொள்ளமுடியவில்லை ...

      //திருமணத்தில் ஜாதி இல்லையா, பிறப்பிலும், சாவிலும் ஜாதியை வைத்துக் கொண்டிருக்கும் சமூகத்தை விட்டு விட்டு கட்சிகளோடு மட்டுமே கட்டூரையை முடித்து விட்டீர்களே!!!!!//
      நீங்கள் கேட்டுள்ளது மிக நியாயமான கேள்வி . நான் உங்களின் கருத்தை ஒப்பு கொள்ளுகிறேன் .

      நன்றி

      Delete

நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி