Saturday 15 October 2011

அணு கழிவு - இந்தியாவின் நிலைப்பாடு - ஒரு அறிவியல் பார்வை


அணுக்கழிவு என்றால் என்ன அதின் மேலாண்மை எப்படிப்பட்டது என்று பதிவுலகின் பல நண்பர்கள் கேள்வி எழுப்பியதால் இந்த கட்டுரையை எழுத முற்ப்பட்டேன்.  மிகவும் தெளிவாக விளங்கும்படி எழுதவேண்டும் என்று நான் நினைக்கிறேன்.  அப்படி ஏதாவது உங்களுக்கு விளங்கவில்லை எனில் தயை கூர்ந்து கேள்விகளை /  கருத்துகளை எழுப்பும்படி வேண்டுகிறேன்.  இதை ஒரு ஆரோக்கியமான் விவாதமாக காண்போம்.
 
அணுக்கழிவு :  அநேகமாக எல்லா அணுமின் நிலையங்களும் யுரேனியம் என்ற தனிமத்தை தான் எரிபொருளாக கொண்டுள்ளது.  தோரியம் என்று இன்னொரு தனிமம் இருந்தாலும் ( நமது கடற்கரையில் கருப்பு கலரில் காணப்படும் மண் )  அதனுடைய பிளவுபடும் வேகம் குறைவாக இருப்பதால் தோரியத்தை விட யுரேனியம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.   யுரேனியம் 238  என்ற  யுரேனியாத்தின்  Isotope யை ஒரு Neutron  கொண்டு பிளக்கும் போது யுரேனியம் 238 ( U238 ) சிதைவடைந்து  U239  ஆக மாறுகிறது.   தொடர்ந்து U239  சிதைவடைந்து Np -239 என்ற இடைப்பட்ட எரிபொருளாக மாறி பின் சிதைவடைந்து PU -239  ( ப்ளுட்டோனியம் 239 ) ஆக மாறுகிறது.
 
இந்த ப்ளுட்டோனியம் 239  தான் அணுக்கழிவு என்று மக்களால் அழைக்கப்படுகிறது. 
 
அணுக்கழிவு மேலாண்மை :  இப்படி கிடைக்கும் அணுக்கழிவை எப்படி பாதுகாப்பது என்பது தான் அணுக்கழிவு மேலாண்மை என அழைக்கப்படுகிறது.  இதற்காக அணுமின் நிலையங்களில் Waste  Management  என்று ஒரு பெரிய விஞ்ஞானிகள் குழு இருக்கும்.  இந்த ப்ளுட்டோனியம் 239  பெரும்பாலும் நல்ல காரீய கொள்கலனுக்குள் ( காரீயம் கதிர்வீச்சை வெளிவிடாது என எங்கோ படித்த நியாபகம் வருகிறது அல்லவா )  சேமிக்கப்பட்டு மிகப்பெரிய Concrete  கொள்கலனுக்குள் வைத்து பாதுகாக்கப்படும்.    1 கிலோ எரிபொருளை பயன்படுத்தினால் கிட்டத்தட்ட 10 கிராம் PU239  கிடைக்கும். 
 
பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் இவற்றை மறு சுழற்சி செய்கின்றனர்.  ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகள் இதை மறுசுழற்சி செய்யாமல் பூமிக்கடியில் புதைத்து வைத்துள்ளனர்.   ஆனால் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது.
 
இந்தியாவின் அணுசக்தி திட்டம் :   இந்தியா  தற்பொழுது  யுரேனியம்  பயன்படுத்தி அணுமின்சாரத்தை ( 1st  Stage ) தயாரிக்கிறது.   நமது  நாட்டில்   செறிவூட்டப்பட்ட  யுரேனியம் இல்லாத காரணத்தினால் தற்பொழுது அவை மேலை நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. 
 
ஆனால் இந்தியாவின் 2 ம் அணுசக்தி நிலை மிக அற்புதமானது.   ஆம் 1st  stage  அணு மின் நிலையங்களில் மீந்திருக்கும் PU239  மற்றும் நமது நாட்டில் மிக வளமாக கிடைக்கும் தோரியம் ( கிட்டத்தட்ட 300000 டன் ,  உலகில் 3 ல் ஒரு பங்கு )  இரண்டையும் எரிபொருளாக பயன்படுத்தும்.  இது ஆச்சரியம் தானே.   இந்த தொழில்நுட்பத்தை இந்தியாவே தயாரித்து அதை TEST REACTORS செய்து பயன்படுத்தியும் பார்த்துவிட்டது என்பது தான் உலக நாடுகள் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.    பெரிய அண்ணாச்சி அமெரிக்கா அதனால் தான் 123  உடன்பாட்டில் " மறு சுழற்சி செய்ய அனுமதிக்க மாட்டோம் " என சொல்லுகிறது.  ஆனால் இந்தியா அதற்காக போராடுகிறது என்பது நாம் அறிந்த விடயம்.  
 
இந்த 2nd stage  அணு மின்சாரம் பயன்பாட்டிற்கு வரும்போது முதல் படியில் கழிவு என்று எப்படி இருக்க முடியும்..?   மாத்திரமல்ல இப்பொழுது உள்ள NSG ( Nuclear  Supplier  Group ) பதிலாக இந்தியாவே ஒரு குழுமத்தை ஆரம்பித்து தோரிய அணு உலைகளை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யமுடியும்.   இது எப்படி வளர்ந்த நாடுகளால் பொறுக்க முடியும்.  ஓகே.  இது இன்னொரு பெரிய topic .  நீங்கள் இப்பொழுது கேட்கலாம் .   அப்படியானால் 2nd  stage  அணுமின் நிலையங்களில் கழிவு /  spend fuel  கிடையாதா ? என்று 
 
 
உண்டு ..  அந்த இரண்டாவது நிலை அணுமின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் PU239  + TH232  இவற்றில் இருந்து கழிவாக U233  கிடைக்கும்.  ஆஹா .. உங்களுக்கு நம்ப முடிகிறதா...?  இந்த U233  எரிபொருளாக AHWR  என்ற Advanced Heavy  Water  Reactor ல் பயன்படுத்தப்படும்.   இந்த அனுமின்சக்தியில் கிடைக்கும் கழிவாக PU239  மறுபடியும் கிடைக்கும்.
 
இப்பொழுது உங்களின் ஊகத்திற்கே விடுகிறேன் .   அணுக்கழிவு மேலாண்மையில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதை..    இந்த காரியங்கள் நடைபெறும் போது இந்தியா உலகில் யாரிடமும் கை ஏந்தாத பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்த முதல் நாடாக மாறும் என்பதில் கொஞ்சமும் ஐயம் இல்லை.  இந்தியா உலகுக்கே முன்னோடியாய் மாறப்போவதிலும் எனக்கு பெருமை தான்.   
 
நன்றி :  THE UPSIDE DOWN BOOK OF NUCLEAR POWER Written by Mr  Saurav Jha   ( Harper collins publishers India )
 
 
 
 
 
 

25 comments:

  1. நீங்கள் சொல்வது பாதி சரி மீதியை உங்கள் வசதிக்கு மறைத்து விட்டீர்கள்...
    முதல் பகுதியான மீல்சுழர்ச்சி முறை மூலம் trombay மற்றும் தாராபூர் மற்றும் கல்பாக்கத்திலும் ப்ளுட்டனியம் கொண்டு மேலும் அணுசக்திக்கான மூலப் பொருட்களை வர வழிக்கும் பொழுது நீங்கள் வசதியாக மறைத்த அணுக கழிவு வருகிறது.. இவை முப்பது வருடங்கள் containergalil பாதுகாக்கப் பட்டு கல்பாக்கம் அருகே புதைக்கப் படும்.. என்று மக்களுக்காக இயங்கும் அரசான இந்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது... இதில் இருக்கும் குழப்பமே பூகம்பம் வந்தால் இந்த மண்ணுக்கு அடியில் புதைத்து வைத்தது என்ன ஆகும் என்ற கேள்வியும், அதற்க்கான பதிலை யோசித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது...
    மேலும் இந்த அணுக்கழிவுகளின் ஆயுட்காலம்
    Technetium-99 (half-life 220,000 years)
    iodine 129 [half life 15.7 million years]
    neptunium 237 [half life 2 milion years]
    plutonium 239 [ half life 24,000 years]

    மேலும் படிக்க,
    http://en.wikipedia.org/wiki/High-level_radioactive_waste_management
    இதுக்கு மேலயா மனுஷன் வாழப் போறான்னு கேக்க போறீங்களா?
    கேளுங்க? யார் வேணாம்னு சொன்னது?

    ReplyDelete
  2. http://suryajeeva.blogspot.com/2011/07/blog-post_20.html

    அப்புறம் எதோ நம்ம நாடு அணுக்கழிவு மேலாண்மை மூலமா கை ஏந்தவே வேண்டாம் என்பது போல் கூறியிருந்தீர்கள், உண்மையில் ஆந்த்ராவில் கண்டுபிடிக்கப் பட்டுள்ள உறனியும் படுக்கை மூலமாய் இருபது வருடங்களுக்கு இந்தியாவின் தேவை பூர்த்தி அடையும் என்று செய்திகள் உள்ளது தலைவரே...

    ReplyDelete
  3. @ Suryajeeva : நண்பருக்கு வணக்கம் . தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    நீங்கள் கொடுத்துள்ள அணுக்கழிவுகளின் ஆயுள்காலம் சரியான தகவல் ( நீங்கள் பார்க்க சொல்லி இருந்த Wikepedia தளத்திலும் இந்த தகவல்கள் இடம் பெற்றுள்ளது ) . ஆனால் இந்த கழிவுகள் தான் மறுபடியும் எரிபொருளாக பயன்படுத்தபடும் என்று எனது கட்டுரையில் எழுதி உள்ளதை மறுபடி நியாபகப்படுத்த விரும்புகிறேன்.

    // கல்பாக்கம் அருகே புதைக்கப் படும்.. என்று மக்களுக்காக இயங்கும் அரசான இந்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.// ஆதாரங்கள் இருந்தால் கொடுங்களேன். நானும் பார்க்கிறேன்

    // இதுக்கு மேலயா மனுஷன் வாழப் போறான்னு கேக்க போறீங்களா?
    கேளுங்க? யார் வேணாம்னு சொன்னது? //

    நானும் தங்களை போல மனிதன் தான் என்பதயும் கூறுகிறேன்

    தங்களின் கேள்விகள் என்னை ஊக்குவிக்கிறது. நன்றி

    ReplyDelete
  4. @ Suryajeeva :
    //உறனியும் படுக்கை மூலமாய் இருபது வருடங்களுக்கு இந்தியாவின் தேவை பூர்த்தி அடையும் என்று செய்திகள் உள்ளது தலைவரே.//

    இருக்கலாம் நண்பரே ... நான் நம்முடைய எதிர் கால திட்டங்களை பகிர்ந்து கொண்டேன்.

    ReplyDelete
  5. உங்கள் பதிவில் technetium பற்றியோ அல்லது iodine பற்றியோ எந்த தகவலும் இல்லை.. கல்பாக்கம் அருகே புதைக்கப் படும் என்பது அதே விக்கிபீடியா பக்கத்திலேயே உள்ளது... கண்ணாடி போட்டு கொண்டு உற்று நோக்கவும்

    Sixteen nuclear reactors produce about 3% of India’s electricity, and seven more are under construction.[37] Spent fuel is processed at facilities in Trombay near Mumbai, at Tarapur on the west coast north of Mumbai, and at Kalpakkam on the southeast coast of India. Plutonium will be used in a fast breeder reactor (under construction) to produce more fuel, and other waste vitrified at Tarapur and Trombay.[39][40] Interim storage for 30 years is expected, with eventual disposal in a deep geological repository in crystalline rock near Kalpakkam.[41]

    ReplyDelete
  6. எதிர் கால திட்டம் என்ன மனிதன் இறந்த பிறகா?

    ReplyDelete
  7. @ Suryajeeva :

    தங்களின் தகவல் படித்தேன். கண்ணாடி போட்டு கொண்டும் பார்த்தேன், எங்கும் அரசு கூறியதாக தெரிவிக்கவில்லையே.

    // எதிர் கால திட்டம் என்ன மனிதன் இறந்த பிறகா? //

    இல்லை .. நீங்களும் நானும் இதை நம் கண்களால் பார்ப்போம் . ஜெய் ஹிந்த்

    ReplyDelete
  8. ஆதாரம் இல்லாமல் தான் விக்கிபீடியா போடுகிறது என்கிறீர்களா...

    இன்குலாப் ஜிந்தாபாத் தான் என் முழக்கம் தோழரே

    ReplyDelete
  9. @ இருதயம் -

    நீங்கள் மட்டும் இந்தியன் அல்ல நாங்களும் இந்தியர் தான், போராடும் மக்களும் இந்தியர்தான். அணுஉலை இயங்கினால் உங்கள் வீட்டுக்கும் என் வீட்டுக்கும் மிசாரம் வரும். பணயம் போராடும் மக்களின் உயிர். அவர்களும் இந்தியர்தான், ஜெய் ஹிந்த் என்று சொல்லும் நீங்கள் இந்த பதிவை படியுங்கள், இதில் ஏதேனும் தவறு இருந்தால் பிறகு சொல்லுங்கள்

    http://thanganivas.blogspot.com/2011/08/blog-post_15.html

    http://thanganivas.blogspot.com/2011/08/1947-15.html

    http://thanganivas.blogspot.com/2011/08/blog-post_17.html

    http://thanganivas.blogspot.com/2011/08/blog-post_23.html

    ReplyDelete
  10. @ நிவாஸ் : நண்பருக்கு வணக்கம் . டன்கள் வருகைக்கு நன்றி .

    தாங்கள் குறித்திருந்த நான்கு பதிவுகளையும் பார்த்தேன். தமிழனை குறித்தும் தமிழ் பற்றை குறித்தும் எழுதி உள்ளீர்கள் . தமிழ் பற்றை குறித்து இந்த கட்டுரை வரையப்படாததால் நான் இந்த பதிவில் பதில் கொடுக்க வேண்டுவதில்லை என நினைக்கிறேன்.

    நன்றி

    ReplyDelete
  11. ketkkum entha kelvikkum pathil illai..
    nalla hits kidaichchaachchu
    very good

    ReplyDelete
  12. நீங்கள் சொல்வது பாதி சரி மீதியை உங்கள் வசதிக்கு மறைத்து விட்டீர்கள்...
    முதல் பகுதியான மீல்சுழர்ச்சி முறை மூலம் trombay மற்றும் தாராபூர் மற்றும் கல்பாக்கத்திலும் ப்ளுட்டனியம் கொண்டு மேலும் அணுசக்திக்கான மூலப் பொருட்களை வர வழிக்கும் பொழுது நீங்கள் வசதியாக மறைத்த அணுக கழிவு வருகிறது.. இவை முப்பது வருடங்கள் containergalil பாதுகாக்கப் பட்டு கல்பாக்கம் அருகே புதைக்கப் படும்.. என்று மக்களுக்காக இயங்கும் அரசான இந்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது... இதில் இருக்கும் குழப்பமே பூகம்பம் வந்தால் இந்த மண்ணுக்கு அடியில் புதைத்து வைத்தது என்ன ஆகும் என்ற கேள்வியும், அதற்க்கான பதிலை யோசித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது...
    மேலும் இந்த அணுக்கழிவுகளின் ஆயுட்காலம்
    Technetium-99 (half-life 220,000 years)
    iodine 129 [half life 15.7 million years]
    neptunium 237 [half life 2 milion years]
    plutonium 239 [ half life 24,000 years]

    மேலும் படிக்க,
    http://en.wikipedia.org/wiki/High-level_radioactive_waste_management

    ஆதாரம் இல்லாமல் தான் விக்கிபீடியா போடுகிறது என்கிறீர்களா...

    இந்த கேள்விகளுக்கும் நீங்கள் நேரடியாக பதில் தரவில்லை...

    ReplyDelete
  13. @ Suryajeeva : நண்பருக்கு வணக்கம் . தங்களின் கேள்விக்கு நன்றி .

    நான் தங்களுக்கு இதற்க்கான பதிலை நான் ஏற்கெனவே கொடுத்து விட்டேன் .

    இப்பொழுது நீங்கள் கேட்கிறீர்கள் " ஆதாரம் இல்லாமல் தான் விக்கிபீடியா போடுகிறது என்கிறீர்களா..."

    நீங்கள் அந்த செய்தியை முழுமையாக படித்து பாருங்கள் " is expected " என்ற வார்த்தை வருகிறது அல்லவா..? அப்படியெனில் அந்த செய்தியின் ஸ்திரதன்மை சம்பந்த பட்ட இணையத்தால் வெளியிடபடாததால் நான் சொன்னேன்
    " தங்களின் தகவல் படித்தேன். கண்ணாடி போட்டு கொண்டும் பார்த்தேன், எங்கும் அரசு கூறியதாக தெரிவிக்கவில்லையே. "

    நண்பருக்கு என பதில் திருப்தி அளித்திருக்கும் என நினைக்கிறேன் .

    நன்றி

    ReplyDelete
  14. expected பிறகு ஒரு கம்மா வருகிறது, அது உங்கள் கண்ணுக்கு தெரியவில்லை போலிருக்கிறது..
    முப்பது வருடங்கள் சேமிக்க தான் ஊகித்திருக்கிரார்கள், புதைப்பதற்கு அல்ல.

    ReplyDelete
  15. @ Suryajeeva : My Dear Friend , yea ... of course a comma is coming , that came there to separate the sentences, that's all.

    Thank You

    ReplyDelete
  16. மிக அருமையான கட்டுரை!!

    அணுக் கழிவு என்ற ஒன்று இல்லைவே இல்லை. மீண்டும் மீண்டும் சுழற்சி முறையில் பயன்படுத்தப்பட்டே வருகிறது எனச் சொல்லும் நீங்கள்.. இத்தனை வளர்ச்சியினை இந்தியா அடைய எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று சொல்லவே இல்லையே!!

    அதுவும் இந்த வலைப்பூவினை கூடங்குளம் அணு உலையின் எதிர்ப்பு போராட்டத்தின் விளைவாய் எடுத்து எழுதி வருகிறீர்கள் என்பதும் நன்கு தெரிகிறது. அதிலும் அணுக் கதிர் வீச்சு என்பதிலும் நீங்கள் பார்வையை விட்டிருந்ததில் மிக்க மகிழ்ச்சி.

    தாங்கள் சொல்வது போன்று எல்லாவற்றிலுமே கதிர் வீச்சு இருக்கத்தான் செய்கிறது. அப்படியான மொபைல் டவர் கதிர் வீச்சினால் தான் சிட்டுக்குருவி என்ற ஒர் இனம் அழிந்து வருகிறது என்பதனையும் அறிவியலார் கட்டுரையாக சமர்ப்பித்து உள்ளனர் என்பதனையும் தாங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

    மேலும் நீங்கள் எடுத்துக்காட்டாக எந்தவொரு கதிர்வீச்சும் மனித இனத்தை அழிக்கும் சக்தி கிடையாது.

    ஆனால், அணு உலை என்று அணுக்களை ஒன்று திரட்டி வைக்கும் பொழுது அதன் ஒட்டு மொத்த சக்தி மனித குலத்தை அழிக்கும் சக்தியினைக் கொண்டது. இதனை தாங்கள் அறியாமல் இருக்க மாட்டீர்கள்.

    விபத்தே இல்லாத ஒன்று என ஏதும் கிடையாது. அப்படியான விபத்து என நடந்தால் ... மேலும் தாங்கள் சொல்வது போன்று இவ் அணுத் திட்டங்கள் ஒன்றும் 10 வருடத்திலோ 100 வருடத்தோடோ நின்றுவிடுவது இல்லை.. ஆரம்பித்துவிட்டால் நிறுத்த முடியாது. பிளந்துவிட்டால் பின்னர் அதன் செயலாக்கத்தை நிறுத்த முடியாது. அப்படியிருக்கும் பொழுது விபத்து என்ற ஒன்று ஏதேனும் ரூபத்தில் வரும் பொழுது?????

    சொல்லுங்கள்.... உங்கள் குடும்பத்தில் எவருக்கும் விபத்தே நடந்தது இல்லையா?

    இல்லை எவரும் விபத்தே பார்த்தது இல்லையா????

    ஒர் கணிணி சரியாக இயங்கவில்லை என்றால் கூட விபத்து நிகழ வாய்ப்பு இருக்கிறது. அப்படியான சூழ்நிலையில் ... பாதுகாப்பு அலர்ட் இருக்கிறது விபத்து நடக்காது எனச் சொன்னால். அது இயற்கை விதிக்கு ஒப்பாகாது. முடிந்தால், விபத்து இல்லாத ஒர் விமான சேவையை உலக நாடுகளைக் கொடுக்கச் சொல்லுங்கள் பார்ப்போம் .. விபத்து இல்லாத பேப்பர் செய்தியினைக் காட்டச் சொல்லுங்கள் பார்ப்போம் ... 1,00,000 கார் போனால் அதில் ஒன்று விபத்தில் ஆகத்தான் செய்யும் .. அதைப்போன்று .. 100 ஆண்டுகள் 200 ஆண்டுகள் என அணு உலைகள் இயங்கும் பொழுது அல்லது அதனை மூடி கழிவுகளை முக்கி பாதுகாக்கும் பொழுதும் விபத்து ஏற்பட்டால் அழிவது மனித குலம்.

    இப்படி அழிந்து போவதற்காகவா ஆசை ஆசையாய் பிள்ளைகளை பெற்று சேகரித்து வாழ்கிறோம்???

    ReplyDelete
  17. Tamil Online Job : படுகை.காம் :
    நண்பருக்கு வணக்கம் . தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ....

    இந்த விடயம் மிக முக்கியமான விடயமாக இருப்பதினால் தான் இந்த விடயத்தை குறித்து மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கட்டுரை எழுத ஆரம்பித்தேன் .

    // ஆரம்பித்துவிட்டால் நிறுத்த முடியாது. பிளந்துவிட்டால் பின்னர் அதன் செயலாக்கத்தை நிறுத்த முடியாது. அப்படியிருக்கும் பொழுது விபத்து என்ற ஒன்று ஏதேனும் ரூபத்தில் வரும் பொழுது?????//
    இது ஒரு தவறான தகவல் . செயலாக்கத்தை நிறுத்த முடியாமல் அணுமின் நிலையங்கள் இருக்க முடியாது . இந்த தொடர்வினைகள் அனைத்தும் பல காரணிகளை கொண்டு கட்டுபடுதப்படும் . உதாரணமாக கட்டுப்படுத்தும் கழிகள் , எமெர்ஜென்சி கோர் கூலிங் இப்படி பல காரியங்கள் உள்ளது .

    விபத்தை குறித்த உங்கள் பயங்கள் நியாயமானது . இல்லை என்று நான் சொல்லவில்லை . பொதுவாக 6 சிக்மா என்று ஒரு காரியம் சொல்லுவார்கள் . நீங்கள் கேள்விப்பட்டிருக்க கூடும் . அதன் படி இந்த மாதிரி அணுமின் நிலையங்கள் அமைக்கவும் திட்டம் / வரைவு இடப்படும் . அதனால் தான் 1000 கோடி ரூபாயில் அமைக்கமுடிகிற அணுமின் நிலையங்கள் 13000 கோடி ரூபாயில் அமைக்கப்படுகிறது . ஏன் என்றால் அதன் பாதுகாப்பு காரணிகள் அதிக அளவில் வைக்கப்படுகிறது ...

    நாம் பயப்படுகிற படி கதிரியக்கங்கள அணுமின் நிலையத்தில் இருந்து வர ஆரம்பித்தால் , கொஞ்சம் யோசித்து பாருங்கள் 434 அணு மின் நிலையங்கள் இருக்கிற இந்த உலகில் எப்படி நாம் வாழமுடியும் ...?

    எனவே நமது பயத்தை நாம் விலக்கலாமே ....

    ReplyDelete
  18. // ஆரம்பித்துவிட்டால் நிறுத்த முடியாது. பிளந்துவிட்டால் பின்னர் அதன் செயலாக்கத்தை நிறுத்த முடியாது. அப்படியிருக்கும் பொழுது விபத்து என்ற ஒன்று ஏதேனும் ரூபத்தில் வரும் பொழுது?????//

    Nuclear chain reaction can be controlled or stopped using control rods.....Materials like cadmium are used for this process.....Uncontrolled chain reactions lead to explosion !!

    ReplyDelete
  19. @ Raghu : Dear Sir, Thank you very much for your visit and your comment.

    I do agree with your statement. But it may please be noted that Uranium which is used in Nuclear Reactors will be enriched only 3 - 4 %. Hence we can control this chain reaction. For this purpose sufficent number of control rods and Emergency core cooling systems will be available in Nuclear Power Plants.

    Let me explain you about the uncontrolled chain reaction which will take place in Nuclear Bombs as it usually have to be enriched from 70 - 80%.

    I hope , you might have understood the difference. Hence m we don't have to worry about Nuclear Reactors.

    Thank you

    ReplyDelete
  20. வணக்கம் நண்பரே நீங்கள சொல்லி இருப்பது முற்றிலும் தவறான விடயம். அணுசக்தி என்பது மிகபெரிய அழிவு வழியே, அது எப்படி என்று விளக்கும் விடியோ சிந்திக்கவும் இணையதளத்தில் "தினமலருக்கு செருப்படி" என்கிற பெயரில் வைக்கப்பட்டுள்ளது. உங்களது கேள்விகளுக்கும் நீங்கள் இதுவரை எழுதிவந்த கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த எல்லா பதிவுகளுக்கும் அந்த விடியோ செய்தி விளக்கமாக அமையும் என்று நம்புகிறேன். அந்த அளவுக்கு "அணு ஆற்றல் குறித்து தொடக்கம் முதல் இறுதிவரை விளக்கப்பட்டுள்ளது. அரசு பயங்கரவாதிகள் தங்கள் ஆட்சியை நிலை நிறுத்தி கொள்ளவும். அந்நிய முதலீடுகளை கவரவும் அடிக்கும் கூத்தே இது. இதுதான் நாட்டின் உண்மையான முன்னேற்றம் என்று நீங்கள் தவறாக விளங்கி வைத்துள்ளீர்கள். விடியோவை பாருங்கள் உங்களுக்கு மேலதிகமான தகவல்கள் தேவை என்றால் தொடர்பு கொள்ளுங்கள். நன்றி தோழரே.

    ReplyDelete
    Replies
    1. i am unable to find the video pse post the link

      Delete
  21. Please read this article regarding nuclear waste disposal by India,

    http://jayabarathan.wordpress.com/2012/02/24/nuclear-waste-burial-2/

    ReplyDelete
  22. DEAR FRIEND
    WHY OUR PEOPLES AFRAID ABOUT nuke power plants ?
    sorry you are an indian you have to tell
    indian do corruption in every thing the same manner if they done in nuke plant if any failure cause what happen?
    one million or two million peoples may be died ok

    but that ....... residue effects of radiation will be emanated continuously.
    you are a gentle man ie an indian
    pl reply

    PRIME MINISTER OFFICE HAS ANY PLAN TO STOP THAT NUKE RADIATION?

    OR PLEASE TELL ME FRANKLY OR TRULY BE AN INDIAN
    IS THIS KUDANKULAM NUKE PLANT HAS GOT ALL ENVIRONMENTAL CLEARENCES AS LIKE IN MANY OTHER DEVP COUNTRIES?

    ReplyDelete
  23. அணுசக்தி வேண்டாம்; ஆனால்...

    அணுசக்தியைப் பிளப்பதால் ஏற்படும் அபரிமிதமான உஷ்ணத்தைக் கொண்டு டர்பைன்களை இயக்கி மின்சாரம் உண்டாக்குவதை மனிதனின் சக்தித் தேவைகளுக்கு முடிவான விடை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். நூற்றுக்கணக்கான அணுமின் நிலையங்களை அமைத்தார்கள்.
    எல்லோரும் சந்தோஷமாக இருந்தார்கள்.அணுசக்தியென்னும் ராட்சசனை அடக்கி நம் மனித இனத்தின் நலனுக்குப் பயன்படுத்துகிறோம் என்கிற திருப்தியில் விஞ்ஞானிகள் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும் போது, ராட்சசன் அப்படியொன்றும் அடங்கிவிடவில்லை என்பது தெரிந்தது.

    விபத்துகள்:-
    முதலில் விபத்துகள். அமெரிக்காவில் 'மூன்று மைல் தீவு' என்கிற இடத்தில் வைத்திருந்த அணுமின்நிலையத்தில் விபத்து. அப்புறம் பற்பல அணுமின் நிலையங்களில் தெரிந்த, தெரியாத விபத்துக்கள். கல்பாக்கம் கூட விலக்கல்ல. அதன்பின் சமீபத்தில் செர்னோபில்.
    அணுமின் நிலையங்களில் விபத்து என்பதை ஒரு அணுகுண்டு இலவசமாக வெடிபபதற்குச் சமானமாக, அவ்வளவு தீவிரமாகப் போகவிடமாட்டார்கள் என்கிற நம்பிக்கையில் நாமெல்லாம் நகத்தைக் கடித்துக்கொண்டிருக்க, விஞ்ஞானிகள் இன்னமும் கான்க்ரீட், இன்னமும் பாதுகாப்புச் சாதனங்கள், ஏதாவது எங்கேயாவது தப்பு என்றால் உடனே எல்லாவற்றையும் அணைத்து விடும்படியான இருமடங்கு மும்மடங்கு பாதுகாப்புகள் என்றெல்லாம் செய்தும், அணுமின் நிலையத்தில் உள்ள மற்றொரு தீவிரமான பிரச்சினையை அவர்கள் நிஜமாகவே மூடி மறைக்கிறார்கள் - அதன் சாம்பல்.

    ஆபத்தான கதிரியக்கம்:-
    அணுமின் நிலையங்களில் எரிபொருளாக உபயோகிக்கப்படும் யுரேனியம், ப்ளுடோனியம் போன்றவை அதீத கதிரியக்கம் கொண்டவை. அதிலிருந்து வெளிப்படும் கதிர்கள் நம்மேல் பட்டால் நம் எலும்புக்குள் இருக்கும் குருத்து அழிக்கப்பட்டு உத்திரவாதமாகச் செத்துப்போவோம்.
    அணுமின் நிலையத்தின் சாம்பலில் இவ்வாறான கதிரியக்கம் அதிகப்படியாகவே இருக்கும். அதைத் தண்ணீரில் கரைக்க முடியாது; காற்றில் தூற்ற முடியாது; அதன் கதிரியக்கம் ஆய்ந்து அவிந்து பத்திர அளவுக்கு வர ஆயிரக்கணக்கான வருஷங்கள் ஆகும்.

    சாம்பலை என்ன செய்வது:-
    அதனால், அந்தச் சாம்பலை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று விழிக்கிறார்கள். துப்பறியும் நாவல்களில் 'டெட்பாடி' போல எப்படி மறைப்பது, எங்கே புதைப்பது என்று அலைகிறார்கள். அவைகளை 'நாடுயுல்ஸ்' (nodules) என்று கெட்டியாக்கி ஆழக்கடல் தாண்டிச் சென்று சமுத்திரத்திற்குக் கீழே புதைக்கலாம்; இல்லை, பூமியில் பள்ளம் தோண்டிப் பத்திரப்படுத்தலாம்.இவ்வளவு தகிடுதத்தம் ப்ண்ணி அந்தச் சனியனை உற்பத்தி செய்து தான் ஆக வேண்டுமா என்று ஒரு கோஷ்டி கேள்வி கேட்க, அதற்கு விஞ்ஞானிகளிடமிருந்து சரியான பதில் இல்லை. அதுவும் இளைய தலைமுறையினர் இந்தக் கேள்விகளை கேட்கிறார்கள்.

    ஆர்ப்பாட்டம், எதிர்ப்பு:-
    உலகில் எங்கே அணுமின் நிலையம் வைப்பதாகச் சர்க்கார் அறிவித்தாலும் அங்கே போய் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். கர்நாடகத்தில் 'கைகா' வில் ஓர் எதிர்ப்பு இயக்கம் தோன்றியுள்ளது. அதுபோல் தமிழ்நாட்டில் திருநெல்வேலி ஜில்லாவில் கூடங்குளம் என்கிற இடத்தில் சோவியத் உதவியுடன் ஆயிரம் மெகாவாட் அணுமின் சக்தி நிலையம் கொண்டுவரப் போகிறார்கள். அதற்கும் ஓர் எதிர்ப்பு இயக்கம் உருவாகி வருகிறது என்று படித்தேன்.

    எரிபொருள்கள்:-
    இந்த எதிர்ப்புகள் நியாயமானவை தான் என்றாலும், எதிர்காலத்தில் மின்சாரம் தயாரிக்க எரிபொருள்கள் காலியாகிக் கொண்டிருக்கின்றன என்பதும் உண்மையே. உலகத்தில், கைவசம் உள்ள பெட்ரோலியம் சம்பந்தப்பட்ட எரிபொருள்கள் அடுத்த நூற்றாண்டின் முற்பகுதியில் காலியாகிவிடும். எண்ணெய்க் கிண்றுகள் வற்றிவிடும். நம் இந்தியாவில் மிக அதிகப்படியாக நிலக்கரி இருக்கிறது. அது இன்னும் பல நூற்றாண்டுகளுக்குத் தாங்கும். ஆனால், நிலக்கரியில் சிக்கல்கள் பல உள்ளன. முதலில் நிலக்கரியைத் தோண்டியெடுப்பதில் உள்ள சங்கடங்கள். ஆழமாகத் தோண்ட வேண்டும்; ஆபத்து அதிகம்; தோண்டுபவர்களுக்கு விபத்துக்கள்; அவர்கள் மூச்சில் ஏறும் கார்பன் கலந்த காற்றினால் அவர்கள் சீக்கிரம் இறந்துபோகிறார்கள். இவ்வாறு இரக்கமற்றுத் தோண்டுவதற்குப் பதிலாக முழுக்க முழுக்க ரோபாட் மெஷின்களை வைத்துக் கொண்டே செய்தால் மிக அதிகமான செலவாகும்.


    (1-10-1988 - தினமணியில் காலங்களை கடந்த எழுத்தாளர் சுஜாதா எழுதியது.)

    ReplyDelete
  24. காற்று மண்டலத் தூய்மைக்கேடு:-
    நிலக்கரியைச் சுரங்கங்களிலுருந்து மின் உற்பத்தி ஸ்தலத்திற்குக் கொண்டு வர ஆகும் செலவு, அங்கேயே உற்பத்தி செய்தால் மின்சார விரயம். அது மட்டுமன்றி, நிலக்கரியை எரிப்பதால் நம் காற்று மண்டலத்தில் அதிகமாகும் கார்பன் டையாக்ஸைடின் அளவு ஒரு பெரிய ஆபத்து. 1900-த்தில் நம் காற்று மண்டலத்தில் கார்பன் டையாக்ஸைடு வாயு பத்தாயிரத்தில் 29 பகுதி இருந்தது. இப்போது 32 ஆக உயர்ந்திருக்கிறது. கி.பி. 2000-க்குள் 36 ஆகிவிடும். இந்தக் கார்பன் டையாக்ஸைடு அதிகமானால் பூமி மெல்ல மெல்லச் சூடேறிக் கொண்டு வருகிறது. இதை க்ரீன் ஹவுஸ் எஃபெக்ட் (Green house effect) என்று சொல்வார்கள்.

    துருவப் பிரதேசப் பனி உருகலாம்:-
    அந்த அதிகப்படி உஷ்ணம் நாம் உணராமல் மெல்ல மெல்ல நம் துருவப் பிரதேசங்களில் உள்ள பனிப் பாளங்களை உருக்கி, நம் சமுத்திரங்களில் தண்ணீர் லெவல் அதிகமாகி, கொஞ்சம் கொஞ்சமாக தினமணி ஆபீசின் மாடிக்கு கடல் வந்துவிட சாத்தியக்கூறுகள் உள்ளன!. மேலும் சமுத்திர நீர் அதிக உஷ்ணத்தால் ஆவியாகி, அதில் கரைந்துள்ள கார்பன் டையாக்ஸைடு காற்றில் அதிகமாகி, வீனஸ் கிரகம் போல் சூடு ஆயிரக்கணக்கான டிகிரிகளுக்கு எகிறும்.

    மாற்று வழிகள்:-
    நிலக்கரி எல்லாவற்றையும் எரிப்பதால் ஆபத்து; அணுசக்தி ஆகாது; பின் என்ன தான் நல்லது? பற்பல மாற்று சாத்தியக்கூறுகள் நம்பிக்கை தருகினறன. முதலில் இங்கிருந்து புரசவாக்கம் போவதற்கு பாட்டரி கார்கள் அமைக்கலாம். ஸோலார் பாய்மரங்கள் விரித்துச் சூரிய ஒளியைப் பயன்படுத்திக் காலேஜ் போகலாம்; இல்லை, சைக்கிள்களை அதிகம் பயன்படுத்தலாம்.

    ஹைட்ரஜன் வாயு:-
    ஹைட்ரஜன் - ஜலவாயு நம்மிடம் நிறைய இருக்கிறது. பூமியின் கைவசம் உள்ள 3000 கோடி கனமைல் தண்ணீரில் கரைந்திருக்கும் இந்த ஹைட்ரஜன் வாயுவை எப்படியாவது எரி பொருளாக உபயோகிக்க முடிந்தால் நம் பிரச்சினைகள் எல்லாமே தீர்ந்துவிடும். இதனால் நம் வாயுமண்டலம் பாழாகாது. ஹைட்ரஜன் எரியும் போது அது விடுவிக்கிற, பிராண வாயுவுடன், ஆக்ஸிஜனுடன் சேர்ந்து கொண்டு மறுபடி நீராவியாகிறது. ஆனால் விஷயம் அத்தனை சுலபமில்லை. ஜலவாயு ரொம்ப லேசானது. அதைச் சேமித்து வைப்பதற்கு ராட்சசக் குடுவைகள் வேண்டும். மேலும் ஜலவாயு முணுக்கென்றால் பற்றிக்கொள்ளும். ஆரம்பக் காலத்தில் ஹைட்ரஜன் நிரப்பின பிரம்மாண்டமான மிதக்கும் கப்பல்கள் பண்ணி பல பேர் எரிந்து போயிருக்கிறார்கள்.

    "சைவ" பெட்ரோல்:-
    அதனால் பல மாற்று முறைகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். இரும்பு, டைட்டேனியம் கலந்த ஒரு கலப்பு உலோகத்திற்கு ஜலவாயுவை உறிஞ்சிக் கொள்ளும் குணம் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் அல்லது கார்பன் டையாக்ஸைடுடன் கலந்து மிதைல் சாராயம், மீதேன் என்று பொருள்களாக மாற்றிச் சேமித்து வைக்கலாம். அதிலிருந்து அவைகளையே மறுபடி பெட்ரோலாகவும் பண்ணலாமா என்று முயற்சி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பெட்ரோல் 'சைவ பெட்ரோல்'. இதை எரிப்பதால் முதலில் ஆரம்பித்த கார்பன் டையாக்ஸைடைத் திரும்பப் பெறுவோம் அவ்வளவே. சுத்தம்!. இவை யாவும் பரிசோதனைச்சாலைக் கனவுகள்.

    சூரியனே கதி

    சூரியன் தான் நமக்கு எப்படியும் கடைசி சரணாக இருக்கப் போகிறது. சூரியன், பத்திரமான தூரத்தில் உள்ள அணு உலை என்று தான் சொல்லலாம். பதினைந்து கோடி கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அணு உலை அதன் சக்தியின் பெரும்பாலான பகுதி விண்வெளியில் வேஸ்ட் ஆகிறது. அதிலிருந்து ஒரு கடுகளவு தான், மொத்தத்தில் 220 கோடியில் ஒரு பகுதி தான், நமக்குக் கிடைக்கிறது. இதுவே நமக்கு ஜாஸ்தி.
    இதற்கு இன்றைய ரேட்டில் விலை போட்டால், ஒரு செகண்டுக்கு நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சக்தியைச் சூரியன் நம் பக்கம் அனுப்புகிறது. அதைச் சரியாகச் சிறைப்பிடிக்க முடிந்தால் போதும். யோசித்துப் பார்த்தால் நம் வாழ்வின் அத்தனை சக்திகளும் ஆதாரமாக சூரிய வெளிச்சத்திலிருந்து கிடைப்பவையே. மழை, மேகம், ஆறுகள், நிலக்கரி, பெட்ரோல் எல்லாமே சூரிய ஒளியின் வேறு வேறு வடிவங்கள் தாம். விதிவிலக்கு அணுசக்தி. அணுசக்தி ஆதிநாள்களில் சிருஷ்டி சமயத்தில் ஏற்பட்ட மகா வெடிப்பில் அணுக்கருகள் இருக்கும் துகள்கள் ஒட்டிக்கொண்ட போது சேமித்து வைக்கப்பட்டவை. சிருஷ்டியைக் கலைப்பதில் தான் எத்தனை சிரமம்!.

    (1-10-1988 - தினமணியில் காலங்களை கடந்த எழுத்தாளர் சுஜாதா எழுதியது.)

    ReplyDelete

நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி